Categories
சேலம் மாநில செய்திகள்

“மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை…..!!!!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூல் கரடுபட்டி கிராமம் அமைந்துள்ளது. தமிழக கர்நாடக வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள்  வந்துள்ளது. அப்போது அங்கிருந்து மின் வேலியில் யானை சிக்கி உள்ளது இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதமன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கால்நடை டாக்டர் மூலமாக சம்பவ இடத்திலே பலியான யாணையை  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட வன அலுவலர் கவுதமன் பேசும்போது,  விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிர்களை காப்பாற்றுவதற்காக சட்ட விரோதமான மின்வேலி  அமைத்து வருகின்றனர். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காட்டு யானை உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |