மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் எலக்ட்ரீசியனான பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடக்கு ரத வீதியில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த பாஸ்கரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.