Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. இனி இதை மட்டும் செய்தால் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும்.

அதில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் போன்ற பல விவரங்கள் இருக்கும் அதில் ஒன்றை தேர்வு செய்து ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். அதேசமயம் ஆதார் கார்டு நகலையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் ஆதார் நகலை பதிவேற்றம் செய்வதற்கு அதிக நேரம் எடுப்பது சரியாக பதிவேற்றாதது போன்ற பல சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் கார்டு நகலை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை எனவும் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டும் போதும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |