தமிழகத்தில் இலவசம் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் வரும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் சார்பாக அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விவசாயம் மட்டும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இலவச மற்றும் மானிய மின்சாரத்தில் முறைகேட்டை தடுப்பதற்கு மின் நுகர்வோரின் இணைப்பு என்னுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்த நிலையில் தற்போது அந்த பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது. எனவே அனைத்து நுகர்வோர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.