தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 21 லட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க அறிவுறுத்தியது. அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். மேலும் வாடகைக்கு இருப்பவர்களின் எண்ணை இணைத்தால் அவர்கள் காலி செய்யும்போது பிரச்சினை ஏற்பட்டு விடும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாடகைதாரர்கள் மானியம் பெறுவது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்சனை. ஏனென்றால் அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகு ஆதார் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது என மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வற்புறுத்த கூடாது என வழக்கறிஞர் ரவி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜன், நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.