Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு வழங்காததால் குழந்தைகளின் பரிதாப நிலை …?

பெரம்பலூர் அருகே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த கூலித்தொழிலாளி நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருவதால் தங்களின் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் குடும்ப வறுமை காரணமாக விருதாச்சலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த ஊரான கல்லை கிராமத்திற்கு வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி தான் சேமித்த பணத்தைக்கொண்டு சிறிய அளவிலான வீட்டை கட்டினார். இதனையடுத்து மின் இணைப்புக்காக விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆன பின்னரும் அவருக்கு மின் இணைப்பு அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கூலித்தொழிலாளி  செல்வம் வேதனை தெரிவிக்கிறார்.

இதனால் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு மின் இணைப்பு விரைவில் வழங்கவும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |