தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் பெயர் மாற்ற விரும்புபவர் உடனே மாற்றிக் கொள்ளலாம். இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Categories