மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகத்தில் முருகேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.நேற்று வீட்டில் இருந்த மின்விளக்குகள் எரியாததால் மோகன்ராஜ் மின்சார இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த மோகன்ராஜை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.