Categories
மாநில செய்திகள்

மின் இழுவை ரயில்: பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பலர் பழனிக்கு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டம் அங்கு அலைமோதும். இதனை முன்னிட்டு பக்தர்கள் எளிதாக மலைக் கோவிலுக்கு மேலே சென்று சுவாமி தரிசனம் செய்யும் அடிப்படையில் அடிவழிப்பாதை மட்டுமின்றி மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேற்கு கிரி வீதியில் உள்ள ரயில் நிலையத்தில் 3 மின்இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்ற சில மாதங்களுக்கு முன்னதாக 3வது மின் இழுவை ரயில் பழுதானதால் அச்சேவையானது நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பழுதான 3வது மின்இழுவை ரயிலானது பழுது நீக்கப்பட்டு மீண்டுமாக இயக்கப்பட்டது. மின்இழுவை ரயிலுக்கு மாலை அணிவித்து சிறப்புபூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து திருஷ்டி சுற்றப்பட்டு பூசணிக்காய்‌ உடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெகுநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மின் இழுவை ரயிலானது பல மாதங்களுக்கு பின்  மீண்டுமாக இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |