Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணத்தை அரசே ஏற்கும்…. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு… குஷியில் மக்கள்…!!!!

பஞ்சாப் மாநிலத்தின் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

இன்று பஞ்சாபில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாபில் மின்சாரம் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. மின் கட்டணம் செலுத்த முடியாமல் பலரது இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Categories

Tech |