Categories
மாநில செய்திகள்

“மின் கட்டணம் செலுத்தும் நடைமுறைகளில் மாற்றம்”…? மின்சார வாரியம் வெளியிட்ட அதிரடி முடிவு…!!!!!

மின் துறை அலுவலகங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதாக மின்சார வாரியம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 5000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மின்துறை அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் ரூ 5,000 ல் இருந்து 2,000 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான பரிந்துரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்துறை அலுவலகங்களில் செலுத்தப்படக்கூடிய அதிகபட்ச கட்டணம் 2000 ரூபாயாக குறைக்கப்படுகிறது.

Categories

Tech |