தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற அனைத்து பிரிவுகளுக்கும் தமிழக மின் வாரியம் மின் வினியோகம் செய்து வருகிறது. இதற்கான மின் கட்டணம் வீடுகளுக்குச் சென்று கணக்கிடப்பட்ட 20 நாட்களுக்குள் செய்து கட்ட வேண்டும். இந்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அபராதத்துடன் சேர்த்து மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே அந்த மாதத்தில் மட்டும் மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த அனுமதிக்கப்பட்டது. மேலும் கட்டணம் செலுத்தாத மின் இணைப்பில் மின் வினியோகம் தடை செய்ய வேண்டும் என்று தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மின் வாரியத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மின் கணக்கிட்ட தேதியில் இருந்து 20 நாட்கள் முதல் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகளில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று மின்வாரிய உத்தர விட்டுள்ளது. அதன்படி 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்த 87 ஆயிரம் மின் இணைப்புகளுக்கான மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மின் இணைப்புகளில் மின் வினியோகம் செயல்பாட்டில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஆய்வு செய்து அந்த மின் இணைப்பு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.