தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் வீட்டை விட்டு யாரும் வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.