இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.மின்வாரியத்திலிருந்து மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்புவதாக மோசடி நபர்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதனால் பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஏதாவது குறுஞ்செய்தி வந்தால் 100 அல்லது 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
உங்களின் பணத்தை இழக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்தால் மீட்க வழி உண்டு. ஆனால் வெளிநாட்டில் பணம் சென்று விட்டால் அதனை மீட்பது மிகவும் கடினம்.மேலும் மோசடி நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.