Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணம் தள்ளுபடி…. ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்… வாக்குறுதி அளித்த கட்சி..!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஒரு குடும்பத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று உத்திரப்பிரதேசம். இங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், காங்கிரஸ் போட்டி போட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனா அறிவித்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. மொத்தம் 403 தொகுதிகளில் 100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லியின் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறுகையில்: “உத்தரபிரதேசத்தில் இருண்ட சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவர வரும் 2022ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை தெரிவித்தார். அதேபோன்று பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் குடும்பம் ஒன்றுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |