Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் திடீர் உயர்வு…. உடனே அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 10 காசுகள், வீட்டு உபயோக மின்கட்டணம் யூனிட்டிற்கு குறைந்தபட்சம் 5 காசுகளும் அதிகபட்சம் 30 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வை உடனே அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பரவல் காரணமாகவும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |