தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினர் நியமனம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்ட உறுப்பினரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்ததாக மின்வாரியம் தரப்பு வாதிட்டது.
Categories