ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு கணக்கீடு செய்தால் தான் இந்த கட்டணம் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்தில் தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் மின் ஊழியர்கள், மின்கட்டணம் எடுப்பதற்கு வரவில்லை.
நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் கணக்கீடு செய்தபோது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.