Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணம் 50% குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதன் காரணமாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதும் மின் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, மே மாதம் 30 யூனிட் வரை பயன்படுத்தும் மின் உபயோகங்களுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வணிகம் சார்ந்த மின் உபயோகிப்பாளர்களுக்கு மே மாத மின் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி எனவும், சினிமா திரையரங்குகளுக்கு மே மாத மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி எனவும் குறிப்பிட்ட அவர், மீதம் உள்ள தொகையை வட்டி இல்லாமல் 3 தவணைகளாக செலுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |