Categories
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வு….. “மத்திய அரசின் வலியுறுத்தலும் ஒரு காரணம்”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு மானியம் தரமாட்டோம். மத்திய அரசின் மின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் உயர்ந்துள்ளது.வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |