கர்நாடக மாநிலத்தின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல் மந்திரியான குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் நிதி சுமை உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் அதிக நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள்.
அது மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் வேலையின்மை, சம்பளக் குறைவு போன்ற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற்று, அடுத்த ஒரு ஆண்டிற்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.