Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை…. “மின்தடையால் குடிநீர் வினியோகம் பாதிப்பு”….!!!!!

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. பரமத்தி சாலையில் இருக்கும் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் மரத்தின்கிளை முறிந்து மின்கம்பத்தில் மீது விழுந்ததால் அது முழுமையாக சேதமடைந்தது 22 ஆயிரம் வோல்டேஜ் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து. அங்குள்ள ட்ரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மின் துண்டிக்கப்பட்டது.

இதனால் நகராட்சி வளாகத்தில் இருக்கும் நீர் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதையடுத்து தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையாளர், தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர். பின் முறிந்து விழுந்த கிளைகளை அகற்றுமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார் ஆணையாளர். இதைத்தொடர்ந்து குடிநீர் வினியோகத்துக்கு தேவையான மின் இணைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து நகரின் மற்ற இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

Categories

Tech |