Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மின் கழிவு மேலாண்மை விதி… “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும்”… திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் தகவல்..!!!!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜார்ஜ் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மின் கழிவு மேலாண்மை விதிகளை அக்டோபர் ஒன்றாம் தேதி 2016 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவு புதுப்பிப்பாளர்களால் மறுசுழற்சி செய்பவர்கள் மட்டுமே மின் கழிவுகளை சேகரித்து செயல்படுத்த முடியும். மேலும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் போன்ற மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

மின் கழிவு மேலாண்மை விதிகள் மீறப்பட்டால் மென்பொருள் உற்பத்தியாளர், தயாரிப்பாளர், இறக்குமதியாளர், மின்கழுவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடு போர் மற்றும் அடி சுழற்சி செய்வோர் போன்றோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம்  ஆகிய இரண்டும் விதிக்கப்படும் அதனால் மின் கழிவுகளை கையாளுபவர்கள் மின் கழிவுகளை எரிக்கவும் மற்றும் முறைசாரா வர்த்தகத்தை தவிர்க்குமாறும் மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பின் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |