தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கொள்முதல் சேவைகளுக்கான எல்காட் இ-போர்ட்டல்-ஐ தொடங்கிவைத்துள்ளார்.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் எல்காட் (ELCOT) அரசின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்புகளுக்கான விருப்பக் கொள்முதல் நிறுவனமாக செயல்படுகிறது.
இந்த எல்காட் நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும், மின்னணு மின் கொள்முதல் என்ற வலைத்தளத்தை எல்காட் உருவாக்கியுள்ளது. சென்னை, நந்தனம், எம்.எச்.யு. (MHU)வளாகத்தில் உள்ள எல்காட் அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கொள்முதல் சேவைகளுக்கான எல்காட் இ-போர்ட்டல்-ஐ (procurement portal) தொடங்கிவைத்துள்ளார்.
இதன் பின் செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளதாவது, “இந்த வலைத்தளம் மூலம் எல்காட் நிறுவனத்தின் பயனர் துறைகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையேயான தொடர்புகள் மேம்படுவதுடன் எல்காட் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “ஆன்லைன் கொள்முதல் எவ்வளவு எளிதான முறையில் இருக்கிறதோ, அந்த அளவு எல்காட் மூலமாக அரசு துறைகள் பொருட்களை மிக எளிதாக இந்த portal முறையில் வாங்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும் சந்தையில் இருக்கும் விலையின் மதிப்பிற்கு ஏற்ப வாங்க முடியும் என்றும் வேகமாக குறைகளை பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.