புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி.
அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார் . மேலும் பேசிய அவர், உயர்கல்விக்கு ரூ. 296.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.