தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவா மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சிவா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை மீட்டனர். பின்னர் சிவாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.