திருநெல்வேலி மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் மின் வாரியத்தின் சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டமானது காலை 11 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடத்தை செயற்பொறியாளர் ராஜன் ராஜ் வெளியிட்டுள்ளார் .
அதன்படி ஏப்ரல் 5ம் தேதி அதாவது நாளை சங்கரன்கோவில் கோட்ட அலுவலகம், 8ம் தேதி நெல்லை கோட்ட கிராம புற அலுவலகம், 12ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகம், 19ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்தில் மின் வாரிய குறைதீர் கூட்டம் நடக்க இருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி நெல்லை கோட்ட நகர்புற அலுவலகம், 26ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், 29ம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் மின் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் நடக்க இருக்கிறது எனக் கூறியுள்ளார்.