Categories
உலக செய்திகள்

மியான்மரில் பள்ளிகளை தற்காலிகமாக மூட உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

மியான்மரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததால் கடந்த மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில தினங்களாக மியான்மரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் அங்கு புதிதாக 4,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா மியான்மரில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மியான்மரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஜூலை 23-ம் தேதி வரை தற்காலிகமாக மூட அந்நாட்டின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |