Categories
மாநில செய்திகள்

“மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள்”… விமான மூலம் இன்று தாயகம் வருகை…!!!!!

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மியான்மரில் மோசடி கும்பல் இடம் சிக்கிய தமிழர்கள் 13 பேரை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதன் பின் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மியான்மரில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |