Categories
உலக செய்திகள்

மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைகள்.. அடைக்கலம் தேடிச் சென்ற அதிகாரிகள்.. திருப்பி அனுப்பக்கோரி இந்தியாவிற்கு கடிதம்..!!

மியான்மர் நிர்வாகம், எல்லை தாண்டி அடைக்கலத்திற்காக சென்ற காவல்துறை அதிகாரிகளை திரும்ப அனுப்ப கோரி இந்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.  

மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி அறிவித்த உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகள் செயல்படுத்த மறுத்தனர். இதனால் ராணுவ ஆட்சி மேற்கொள்ளும் கடும் நடவடிக்கைகளுக்கு அஞ்சிய அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் சமீபகாலமாக இந்திய எல்லையை கடந்துள்ளனர்.இதுகுறித்து மியான்மர் நிர்வாகம், இந்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில் இரண்டு நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவை நீடிக்க எல்லை தாண்டி சென்ற காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வருமாறு கேட்டுக் கொண்டது. மேலும் கடந்த மாதத்தில் மியான்மரில் இராணுவ ஆட்சி மேற்கொண்ட சதி திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டதோடு வேலைநிறுத்தங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டதால் மியான்மர் அரசு திணறி வருகிறது.

மேலும் போராட்டங்களை தடுக்க பாதுகாப்பு படையினரும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சுமார் 55 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சனிக்கிழமை அன்று ராணுவத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டக்காரர்கள் திரண்டனர். மேலும் மிகப்பெரு நகரமான யாங்கோனில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தினர்.

Categories

Tech |