Categories
தேசிய செய்திகள்

மியான்மர் எல்லை வரை ரயில் பாதை அமைக்கும் பணி…. எப்போது நிறைவடையும்?…. வெளியான தகவல்….!!!!

பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரயில்வே மேற்கொள்ள இருக்கும் புது திட்டங்கள் குறித்து வட கிழக்கு எல்லை ரயில்வேயின் பொதுமேலாளர் அன்ஷுல் குப்தா கூறினார். அவற்றில் இந்தியா-மியான்மார்-பூடான் ரயில் இணைப்பு குறித்து பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்ஷுல் குப்தா கூறியிருப்பதாவது “மணிப்பூரில் மியான்மர் எல்லை வரையுள்ள மோரேயில் ரயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரயில்பாதை 2 முதல் 2.5 வருடங்களில் முடிக்கப்படும்.

வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக இது இருக்கும். இது மூலோபாய தேவைகள், சுற்றுலா இணைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும். கரீம்கஞ்ச்(இந்தியா) மற்றும் ஷாபாஸ்பூர்(வங்காளதேசம்) இடையிலான ரயில் பாதை மார்ச் 2023-க்குள் முடிக்கப்படும். அத்துடன் பூடானுக்கான முதல் ரயில் இணைப்புக்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு மார்ச் 2023-க்குள் முடிக்கப்படும்.

Categories

Tech |