தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இதன் டைட்டில் லுக் மிரட்டலாக வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சி சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். டைட்டில் லுக்கில் மாட்டுக்கொம்பு, சூலாயுதம், அரிவாள் போன்ற அடையாள சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு வாடிவாசல் திரைப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்று சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Categories