Categories
தேசிய செய்திகள்

மிரட்டலான தோரணை….. பூங்காவில் நடனமாடும் ஜோடி…. நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்…!!!

பிகார் மாநிலம் பாட்னாவில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு நாகப்பாம்பு ஜோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து விளையாடும் வீடியோவானது இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங்க் வெளியிட்டுள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், பாட்னா உயிரியல் பூங்காவில் குளிர்ந்த வானிலையை ரசிக்கும் இந்திய நாகப்பாம்பு ஜோடி மிரட்டும் பாணியில் இருக்கும் இப்பாம்புகள் உலகளவில் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் வகையைச் சேர்ந்தவை.

இந்த பாம்புகளின் நளினமும், தோரணையும் அவற்றின்மேல் அச்சத்தையும் மரியாதையும் ஏற்படுத்துகின்றன என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்த இரண்டு நாகப்பாம்புகள் மிரட்டலான தோரணையில் நின்று போஸ் கொடுக்கின்றன. கேமராவுக்கு போஸ் கொடுப்பது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |