புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து வரும் பகத் பாசிலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாக உள்ளது.
Meet the #VillainOfPushpa 🔥
The most talented #FahadhFaasil turns into menacing BHANWAR SINGH SHEKHAWAT(IPS) to lock horns with our #PushpaRaj 👊#PushpaTheRise #ThaggedheLe 🤙@alluarjun @iamRashmika @Dhananjayaka @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @MythriOfficial pic.twitter.com/P0yNiX0Ruo
— Pushpa (@PushpaMovie) August 28, 2021
இந்நிலையில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து வரும் பகத் பாசிலின் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இவர் இந்த படத்தில் பன்வார் சிங் ஷேகாவாத் (ஐபிஎஸ்) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மொட்டைத் தலையுடன் மிரட்டலான லுக்கில் பகத் பாசில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .