நடிகர் அருண் விஜய் தனது நியூ லுக் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பார்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
A glimpse at the brilliant work by my bro @storyteller_ind
Absolutely loved doing this…❤ #AVphotoshoot pic.twitter.com/S0FxIQRzwo— ArunVijay (@arunvijayno1) May 5, 2021
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் . இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது நியூ லுக் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். கடா மீசையுடன் மிரட்டலான லுக்கில் அருண் விஜய் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.