நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள் சசிகலாவை ஆதரித்து பேசுவது அவர்களுடைய விருப்பம். அடுத்த கட்சியை பற்றி நாங்க குறை சொல்ல முடியுமா ? எங்களுடைய கருத்தை தான் சொல்ல முடியும். பாமக கூட தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி கிடையாது.கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பல கட்டமாக நடைபெறும். திமுகவில் எத்தனை கட்டமாக நடக்கிறது ? எல்லாக் கட்சிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்படும்.
பாமகவுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி எந்த எந்த சூழ்நிலையில், எதை செய்ய வேண்டுமோ… அந்த சூழலில்… அந்தந்த நேரத்துக்கு அரசாங்கம் செயல்படும். டிடிவி தினகரன் அறிக்கையில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றும், திமுகவை வீழ்த்தவேண்டும் என்று சொல்வது… அது அமமுக என்ற அவர்களின் கட்சி கருத்து. அண்ணா திமுக வேற, அமமுக வேற. அமமுக எவ்வளவோ மூக்கை நுழைத்து பார்க்கிறது. நிச்சயமாக ஒன்னும் நடக்காது. அமமுக கட்சியில் இருந்த விலகி அதிமுகவில் சேர்வதற்கு விருப்பப்பட்டால் எங்களுடைய தலைமை முடிவு செய்யும்.
திமுக தான் பொது எதிரி அதை சேர்ந்துதான் வீழ்த்தவேண்டும் என்று சசிகலா சொல்லியுள்ளது, அது அவர்களுடைய கருத்து. அதற்க்கு நாங்க எப்படி கருத்து சொல்லமுடியும் ? அண்ணா திமுகவை பொருத்தவரைக்கும் பொன்மனச்செல்வன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்தி என்று சொன்னார்கள். அதுதான் எங்களுக்கு எதிர்க்கட்சியாக பார்க்கிறோம். அதை எதிர்த்து தான் அண்ணா திமுக தொடர்ந்து போராடி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.
வேலூர் பிரசாரத்தில் துப்பாக்கியோடு போலீஸ் ஒருவரை பிடித்தது, இப்போது சேலத்துக்கும், சென்னைக்கும் வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர்களால் விடப்பட்டுள்ளது குறித்து, எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன். இந்த மிரட்டல், உருட்டல், எதுவுமே பயப்பட மாட்டேன் என அதிரடியாக பேசினார்.