Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டல் காட்டிய… கர்ணன் தனுஷின் “கண்டா வர சொல்லுங்க”பாடல்… ட்ரெண்டிங்கில் முதலிடம்..!!

‘கண்டா வரச்  சொல்லுங்க’ என்ற கர்ணன் பட பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் ‘கண்டா  வர சொல்லுங்கள்’ என்கிற பாடல் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தின்  இயக்குனர் மாரி செல்வராஜ். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அனிருத், ஏ. ஆர். ரஹ்மானை பாடல்களை விட கிராமிய இசையை மையமாகக் கொண்டு பாடப்பட்ட இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .அனிருத் இசையில் காதலர் தினத்தன்று யூடியூப்பில் வெளியிட்ட ‘காத்துவாக்குல் இரண்டு காதல் ‘படத்தில் இடம்பெற்ற’ இரண்டு காதல்’ எனும் பாடலை  80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அதேபோன்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அயலான் படத்தில் இடம்பெற்ற ‘வேற லெவல் சகோ’ என்ற பாடலை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர் . இந்த இரண்டு பாடல்களுமே மேற்கத்திய இசைப் பாணியில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது கர்ணன் படத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘கண்டா வர சொல்லுங்க’ எனும் கிராமிய இசையை மையமாகக் கொண்டு பாடப்பட்ட இந்தப் பாடலை  சுமார் 90 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேற்கத்திய இசை பாடல்கள் அதிகம் வந்தாலும் கிராமிய பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

Categories

Tech |