Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மிரட்டல் விடுத்த அண்ணன்…. மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

அண்ணன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் 32 வயது மாற்றுத்திறனாளி வாலிபருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நடைபெற இருந்தது. இதில் மணமகன் சென்னை ஐ.ஐ.டி-யில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணமகனின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் 2-வது திருமணத்திற்கு தயாரானார். இதுகுறித்து அறிந்த மணப்பெண்ணின் அண்ணன் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

அத்தனையும் மீறி திருமணம் செய்து கொண்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தங்கையிடம் தெரிவித்துள்ளார். இதனால் மணமேடையில் வைத்து தனக்கு திருமணம் வேண்டாம் எனக் கூறி மணப்பெண் கீழே இறங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இது குறித்து அறிந்த விருதாச்சலம் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் சுமூக முடிவு ஏற்படாததால் இருவீட்டாரும் சோகத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |