ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, திமுகவை கைப்பொம்மையாக ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்பதாக கூறி பாஜகவை சரமாரியாக விளாசினார். சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல் செயல்படுவது இல்லை எனவும், பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் அதிமுகவில் ஆண்மையோடு பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தான் வெளிப்படையாக நடக்கும் அட்டூழியங்களை வெளிப்படையாக செய்தி வெளியிட்டு வருவதாகவும் கூறினார் பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது..
வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் அதிமுகவை இவ்வாறு கேவலமாக பேசுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது இது குறித்து கட்சி மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக தொண்டர்கள் கொந்தளித்தனர். அதோடு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவை சரமாரியாக விளாசித் தள்ளினார்.. தொண்டர்களின் இந்த தொடர் வலியுறுத்தல் காரணமாக வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை புறக்கணிக்க அதிமுக திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பற்றி தகவல் அறிந்த பாஜக உடனடியாக மேலிடத்தை அணுகி உள்கட்சி தேர்தலில் தங்களுக்கான சீட்டை ஒதுக்குமாறு டெல்லியிலிருந்து உத்தரவு போட வைத்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அதிமுகவும் எம்எல்ஏ பேச்சுக்கு மன்னிப்பு அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.