கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலியா தளங்களிலிருந்து செய்திகளை தங்களின் வலைத்தளங்களுக்கு வெளியிடுவதற்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சட்டத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் நிறுவனம் வெளியேற போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியயோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறினார்.
ஆஸ்திரேலியா அரசும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கும் இடையே பல நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு முன்மொழியப்பட்ட இந்த சட்டங்களை மாற்றப் போவதில்லை என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது .சென்ற வார இறுதியில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் ஃபேஸ்புக் அதிகாரிகள் இந்த சட்டம் தொடர்பான மாற்றங்கள் குறித்து பேசியுள்ளனர். திங்களன்று இந்த மசோதா செனட்டில் ஒரு விவாதத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இனி மசோதாவில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று நிதியமைச்சர் சைமன் பர்மிங்ஹாம் கூறியுள்ளார். மேலும் இந்த சட்டம் உலக மக்கள் அனைவருடைய கவனத்தையும் திருப்பியுள்ளது.