ஜியோமி நிறுவனம் புதிய ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும். இதன் டிஸ்பிளே குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்.
இந்த போனில் Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம், Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS சப்போர்ட்டுடன்), 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார், 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார், 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார் ஆகியவை இடம்பெறும்.
இந்த ஸ்மார்ட்போனின் 4,600mAh பேட்டரி, 120W அதிவேக சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்ட 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.55,100 ஆகவும், 8ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,600 ஆகவும், 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.63,300ஆகவும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோமி நிறுவனம் புதிய டீசரின் மூலமாக ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.