மிருக்காட்சி சாலையில் சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தோனேசியா நாட்டில் ரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கசாங் குலிம் என்ற மிருகக்காட்சிசாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலைக்கு ஹசன் அரிஃபின் என்ற நபர் ஒருவர் சென்றுள்ளார். இவருக்கு 19 வயதாகிறது. இந்த விலங்குகளை பார்வையிட்டு வந்துகொண்டிருந்த ஹசன் ஒரங்குட்டான் இருக்கும் கூட்டின் பார்வையாளர்களின் தடுப்பை தாண்டி மேலே ஏறியுள்ளார். அவர் டினா என்ற ஒரங்குட்டான் மற்றும் குரங்குகளுடன் விளையாடியுள்ளார். அப்பொழுது குரங்கு அவரது சட்டையை வசமாக பிடித்து கொண்டது. அவர் விடுபட முயற்சித்ததும் அவரது காலை வசமாக பிடித்து கொண்டது.
இதனை அடுத்து குரங்கு அவரது காலை பிடித்து இழுக்க ஆரம்பித்தது. அங்கு வந்த வேறு ஒரு நபர் அவரை காப்பாற்ற போராடி கொண்டிருந்தார். பிறகு ஹசன் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என உதவிக்கு கத்த ஆரம்பித்துள்ளர். பின்பு காலை பிடித்து இருந்த குரங்கு தனது பிடியை தளர்த்தியது. தற்போது இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மிருகக்காட்சிசாலையின் மேலாளர் கூறியதாவது, “அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு விலங்குகளின் அடைப்புகளை நெருங்க வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகைகள் இருந்த போதிலும் ஹசன் அதனை மீறியுள்ளார். மேலும் அதிகாரிகளின் அனுமதியின்றி வீடியோ எடுக்க ஒராங்குட்டான் கூண்டிற்கு அருகில் சென்றுள்ளார். இவர் பார்வையாளர் தடுப்புச்சுவரை தாண்டி குதித்து ஒராங்குட்டானை உதைத்து விதிகளை மீறியிருக்கிறார்” என அவர் கூறியுள்ளார்.