இடியட் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனரான ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் இடியட் திரைப்படம் உருவாகி உள்ளது. காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாகவும் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயில்சாமி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு விக்ரம்செல்வா இசையமைத்திருக்கின்றார். படத்தின் தயாரிப்பு பணியானது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கின்றது. இந்த காட்சியில் சிவா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இணைந்து நடித்துள்ளனர். பேய் மிரட்ட இவர்கள் கலாய்க்கும் வகையில் இது அமைந்திருக்கின்றது.