நடிகர் பிரபு இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர் இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். 70-வது ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையில் பங்காற்றிய இவர்கள் இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்ருள்ளார். லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதனால் திரையுலகை சார்ந்த அனைத்து பிரபலங்களும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இவ்வகையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் நடிகர் பிரபு கண்ணீர் மல்க லதா மங்கேஷ்கரின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
எங்களது வீட்டில் ஒருவராகவே ‘அத்தை லதா மங்கேஷ்கர்’ திகழ்ந்தார்.நான் எப்போதும் அன்புடன் அவரை அத்தை என்றே அழைத்து வந்துள்ளேன். அவர் அப்பாவை அன்புடன் ‘அண்ணா’ என்று வாய் நிறைய கூப்பிடுவார். இருவருக்கும் இடையே இருந்த சகோதர பாசத்தை அவ்வளவு எளிதாக விவரித்து விட முடியாது. எங்களது வீட்டில் அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் லதா மங்கேஷ்கர் கலந்து கொண்டிருக்கிறார்.எனது மகன் விக்ரம்பிரபு திருமணத்திற்கு மட்டும் அவரால் நேரில் வர இயலவில்லை வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அப்பா இறந்த போது அவர் உடல் நலக்குறைவால் நேரில் வர இயலவில்லை. 10 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தார்.
அப்பா இல்லாத அன்னை இல்லத்தில் எங்களோடு துக்கத்தை பகிர்ந்து கொண்ட நாட்களை எப்போதும் மறக்க முடியாது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கடவுள்களின் போட்டோவுடன் அப்பாவின் போட்டோவையும் எங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பாவின் புகைப்படத்தை அனுப்பும் போது அதில் ‘அண்ணா…. அண்ணா’ என டைப் செய்து அனுப்புவதை வழக்கமாக அவர் வைத்திருந்தார். அவருடனான எங்கள் குடும்பத்தின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனதில் இருக்கும் அப்பாவுடன் அவரும் சென்று விண்ணுலகில் கலந்து விட்டார். இவ்வாறு நடிகர் பிரபு லதா மங்கேஷ்கரின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.