Categories
உலக செய்திகள்

“மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம், மீட்டர் மீட்டராய் சரியும்”…. போரை நிறுத்துங்கள் புதின்…. கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதனால் பலரும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் போரை நிறுத்துங்கள் புதின் என்று வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய் சரியும். கரும்புகை வான் விழுங்கும். பகலை இருள் குடிக்கும். கடல்கள் தீ பிடிக்கும். குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும். ஆயுதம் மனிதனின் நாகரிகம். போர் அனாகரிகம். போரை நிறுத்துங்கள் புதின் என்று கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |