Categories
அரசியல்

“மிளகுக்கு பதில் காய்ந்த பப்பாளி விதை”?…. பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி…. பகீர் தகவல் அம்பலமானது….!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதிலாக பப்பாளி விதை கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவிரி ,டெல்டா, தாளடி, பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியது போல் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என மாவட்டத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தார். தொடர்ந்து நானிலம் பகுதியில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.

இதனை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள் என விவசாயிகளிடம் கூறுவது எந்த விதத்திலும் நடைமுறைக்கு ஒத்துவராது. எல்லாம் திமுக அரசின் கவனக் குறைவு தான் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மிளகுக்கு பதிலாக பப்பாளி விதை கொடுக்கப்பட்டதாக பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டினர்.! இது அதிமுக முன்வைக்கும் குற்றச்சாட்டு இல்லை…மக்களின் குற்றச்சாட்டு…!இதுகுறித்து தவறு செய்தவர்கள் யார்.? என முதல்வர் ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அவர் தனது பேட்டியில் கூறினார்.

Categories

Tech |