Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மிளகு பொடியை கொண்டு வா” ரகளை செய்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபோதையில் ஹோட்டலில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாம்பவர்வடகரை பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஹோட்டலுக்கு மதுபோதையில் சாப்பிட வந்த 2 பேர் ஆபாயிலுக்கு கூடுதலாக மிளகுபொடி கேட்டுள்ளனர். அதனை எடுத்து வருவதற்கு தாமதமானதால் போதையில் இருந்த இருவரும் ஹோட்டலில் இழந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

இதுகுறித்து அருணாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போதையில் ரகளை செய்த மாரியப்பன் மற்றும் பாஸ்கர் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |