Categories
உலக செய்திகள்

“மிஷன் இம்பாசிபிள்”…. என்னப்பா இப்டி சொல்லிட்டீங்க?…. உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான “மிஷன் இம்பாஸிபிள்” என்ற படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்துள்ளார். இந்த படம் திரையுலகில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தின் ஆறு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி 7-ஆம் பாகத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த படம் 2023-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2013-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மிஷன் இம்பாசிபிள் எட்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு 2024-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிஷன் இம்பாசிபில் படத்தின் பாகம் 7,8 ஆகிய இரண்டு படங்களும் தள்ளிப்போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |