மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
#UchanthalaRegaiyile –https://t.co/nAkzp6Ve9B@Rockfortent @andrea_jeremiah @shamna_kkasim @Actorsanthosh @Lv_Sri @saregamasouth @PRO_Priya @kbsriram16 @APVMaran pic.twitter.com/RHSQXGkM9T
— Mysskin (@DirectorMysskin) October 2, 2021
ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிசாசு-2 படத்தில் இடம்பெற்ற ‘உச்சந்தல ரேகையிலே’ என்கிற பாடல் வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த அழகிய பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.