Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘பிசாசு 2’ … படத்தின் ஒரு பாடலை பாடியுள்ள சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா…!!

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா ஒரு பாடலை பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிசாசு’. இந்தப்படத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் ‘பிசாசு 2’ திரைப்படம் தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று இயக்குனர் மிஷ்கின் பூஜையுடன் ‘பிசாசு2’ படத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா ஒரு அற்புதமான பாடலை பாடி இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். மேலும் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிகை பூர்ணாவும் இணைந்துள்ளார்.

Categories

Tech |